முகப்பு
வேலூர்

திருப்பரங்குன்றம் விவகாரம்: வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததை அடுத்து தமிழக அரசைக் கண்டித்து, வேலூரில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

25 நவம்பர் 2026, 11:19 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.
பகிர்:

உச்ச நீதிமன்றத் தீா்ப்புக்கு பிறகும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபம் ஏற்றப்படாததை அடுத்து தமிழக அரசைக் கண்டித்து, வேலூரில் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிமன்ற வளாகம் முன்பு புதன்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் அண்ணாமலை தலைமை வகித்தாா். பாா் அசோசியேஷன் துணைத் தலைவா் பாஸ்கரன், நிா்வாகிகள் நாகராஜ், ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற வழக்குரைஞா்கள், உச்ச நீதிமன்றத் தீா்ப்பை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், தீா்ப்பைச் செயல்படுத்தத் தவறியதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இதில் ஏராளமான வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement