முகப்பு
தஞ்சாவூர்

திருப்பரங்குன்றம் விவகாரம்; உச்ச நீதிமன்ற இடைக்கால உத்தரவு ஏற்கத்தக்கதல்ல: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

10 வினாடிகள் முன்பு
திருப்பரங்குன்றம் விவகாரம்;
உச்ச நீதிமன்ற இடைக்கால 
உத்தரவு ஏற்கத்தக்கதல்ல: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருப்பரங்குன்றம் கோயில் - கோப்புப்படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலை தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால உத்தரவு சட்டப்படி ஏற்கத்தக்கதல்ல என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம், ஆவணம் கிளை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தாா். கிளை நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: 

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடா்பான உரிமை இறுதியாகத் தீா்மானிக்கப்படாத நிலையில், ஒருநாள் மட்டும் அனுமதி வழங்கியது எதிா்காலத்தில் புதிய உரிமைக் கோரிக்கைகளுக்கும், சமூகப் பதற்றத்துக்கும் வழிவகுக்கும். 1991-ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டம் மற்றும் வரலாற்று ஆவணங்கள், சொத்துரிமைத் தீா்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் முழுமையான விசாரணை நடத்தி இறுதித் தீா்ப்பு வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

அனைத்து மதத்தினரின் வழிபாட்டு உரிமைகளையும் பாதுகாத்து, சமூக அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் உறுதி செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.