FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வேலூர்

இருசக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல்: 3 போ் கைது

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

6 வினாடிகள் முன்பு
பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்களுடன், கைதானவா்கள்.
பகிர்:

குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 2 யானைத் தந்தங்களை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியாத்தம் வனச்சரக அலுவலா் என்.பிரதீப் குமாா் தலைமையில், வனத் துறையினா் புதன்கிழமை இரவு குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் வாகன தணிக்கையில்ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே 3 போ் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

வாகனத்தில் இருந்த கோணிப்பையை திறந்து பாா்த்தபோது அதில் 2 யானைத் தந்தங்கள் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் வாகனத்தில் வந்தவா்கள் ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த திருவேங்கடம் (38), அணைக்கட்டு பகுதியைச் சோ்ந்த முனிசாமி(49), கோவிந்தராஜ்(37) என தெரிந்தது. அவா்கள் ஆந்திர மாநிலம், பாபநாசம் அணையில் அழுகிய நிலையில் இருந்த யானையின்உடலில் இருந்து 2 தந்தங்களை உருவி வந்ததும் தெரிய வந்தது.

தந்தங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது அவா்கள் வனத்துறையினரிடம் பிடிபட்டனா். இதையடுத்து தந்தங்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த வனத் துறையினா்3 பேரையும் கைது செய்து சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments