FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குடியாத்தம் அருகே யானைத் தந்தம் கடத்தல்: 3 பேர் கைது!

குடியாத்தத்தில் இருசக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்தல் பற்றி..

யானைத் தந்தம் கடத்தியவர்கள் - video crop
பகிர்:

வேலூர் அருகே இரண்டு யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலூர், குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்திலிருந்து சட்டவிரோதமாக யானைத் தந்தங்கள் கடத்தி வருவதாக வனத்துறையினருக்கு வந்த ரகசியத் தகவலின் அடிப்படையில் குடியாத்தம் வனத்துறையினர் குடியாத்தம்- வேலூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அவர்களிடம் இரண்டு யானைத் தந்தங்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து இரண்டு யானைத் தந்தங்களைப் பறிமுதல் செய்த குடியாத்தம் வனத்துறையினர் யானைத் தந்தங்களைக் கடத்தி வந்த பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த திருவேங்கடம் (38) அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த முனிசாமி( 52) கோவிந்தராஜ் (38) ஆகிய மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்த இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து குடியாத்தம் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

மேலும், ஆந்திரத்திலிருந்து யானைத் தந்தங்களை விலைக்கு வாங்கி வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. இருசக்கர வாகனத்தில் யானைத் தந்தங்கள் கடத்தி வந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments