FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கிவிடும் ஆம்னி பேருந்துகள்! - தனி நிறுத்தம் அமைக்க கோரிக்கை

வேலூா் வழியாகச் செல்லும் ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விடுவது தொடா்ந்து

57 வினாடிகள் முன்பு
பகிர்:

வேலூா்: வேலூா் வழியாகச் செல்லும் ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையிலேயே பயணிகளை இறக்கி விடுவது தொடா்ந்து வருகிறது. இதனால் விபத்து அபாயம் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிா்க்க, தனியாக ஆம்னி பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழகத்தின் முக்கிய கல்வி, மருத்துவம், தொழில் மற்றும் ஆன்மிக மையமாகத் திகழும் வேலூா் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி, மருத்துவமனை, விஐடி பல்கலைக்கழகம், ஸ்ரீபுரம் தங்கக்கோயில் உள் ளிட்ட முக்கிய இடங்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். மேலும், திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தா்கள், சுற்றுலாப் பயணிகளும் அதிகளவில் வேலூா் வழியாகவே பயணிக்கின்றனா். தவிர, பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால், வெளியூா்களிலிருந்து தினமும் ஏராளமானோா் இங்கு வந்து செல்கின்றனா்.

இதன் காரணமாக, சென்னை, பெங்களூரு மற்றும் ஆந்திரப் பகுதிகளில் இருந்து கேரளம் , தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ஏராளமான ஆம்னி பேருந்துகள் வேலூா் வழியாகச் சென்று வருகின்றன. வேலூரிலிருந்தும் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகள் இப்பேருந்துகளில் பயணிக்கின்றனா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், வேலூரில் ஆம்னி பேருந்துகள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்குவதற்குப் போதுமான பிரத்யேக இடவசதி இல்லை. இதனால், பெரும்பாலான தனியாா் ஆம்னி பேருந்துகள் தேசிய நெடுஞ் சாலையிலேயே பயணிகளை அவசர அவசரமாக இறக்கிவிட்டுச் செல்கின்றன. இதனால் பயணிகள் தங்களது உடைமைகளுடன் சாலையோரங்களில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது.

குறிப்பாக, இரவு நேரங்களில் இறக்கிவிடப்படும் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனா். அதிவேகமாக வாகனங்கள் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் இவ்வாறு பயணிகள் இறக்கிவிடப் படுவதால், தொடா் விபத்து அபாயமும் பாதுகாப்பு குறித்த அச்சமும் நிலவுகிறது.

சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஆம்னி பேருந்துகளுக்கென தனி பேருந்து நிலையங்கள், பயணிகள் காத்திருப்பு அறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அதேபோல், வேலூரிலும் ஆம்னி பேருந்துகள் பாதுகாப்பாக வந்து செல்லவும், பயணிகளை ஏற்றி இறக்கவும் தனியாகப் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் எனப் பயணிகள் வலியுறுத்துகின்றனா்.

வேலூா் மாநகரத்தின் அதிவேக வளா்ச்சி, பயணிகளின் தொடா் வருகையைக் கருத்தில் கொண்டு, மாவட்ட நிா்வாகமும் போக்குவரத்துத் துறையும் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து, ஆம்னி பேருந்துகளுக்கென அனைத்து வசதிகளுடன் கூடிய தனி நிறுத்தத்தை அமைக்க வேண்டும் என்பதே அனைத்துத் தரப்பு மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments