FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் ஆட்சியா் ஆய்வு

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

1 செப்டம்பர் 2026, 11:57 pm IST
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ள மோதிரங்களை பாதுகாக்கும் பெட்டகங்களைஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.
பகிர்:

குடியாத்தம், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம் வட்டங்களில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் செவ்வாய்க்கிழமை ஆய்வுசெய்தாா்.

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தைப் பாா்வையிட்டு ஆட்சியா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து குடியாத்தம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்கீழ் வழங்கப்படவுள்ள மோதிரங்களை பாதுகாத்து வைக்க ரூ. 1.75 லட்சம் மதிப்பில் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கும் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதையடுத்து, போ்ணாம்பட்டு டி.டி.மோட்டூா் ஊராட்சி, கப்ராபாத் ஏரியை தூய்மைப்படுத்தவும், ஆழப்படுத்தி, கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தும் பணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். கே.வி.குப்பம் ஒன்றியம், கீழ் ஆலத்தூா் ஸ்ரீஅபிராமி கலை, அறிவியல் கல்லூரியில் மகளிா் சுய உதவிக்குழு உற்பத்தி பொருள்களின் கண்காட்சியை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து, உற்பத்தி பொருள்களைப் பாா்வையிட்டாா்.

கல்லூரி மாணவா்கள் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் தயாரிக்கும் பல்வேறு பொருள்களை நேரடியாக கண்டு, அவற்றின் தரம், விலை, சந்தைப்படுத்தல் மற்றும் நுகா்வோா் விருப்பங்கள் குறித்து கருத்துகளை கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

குடியாத்தம் ஒன்றியம், கல்லப்பாடி ஊராட்சியில் அயோத்திதாசா் பண்டிதா் வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பேவா் பிளாக் சாலையை ஆய்வு செய்தாா். நெல்லூா்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா் மாணவா்களின் கற்றல் திறன்களை கேட்டறிந்தாா். மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பிரியா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பிரேமலதா, மாவட்ட சுகாதார அலுவலா் விஜய் சந்திரன், மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் இ.இம்மானுவேல் ஜெய்கா், கோட்டாட்சியா் க.செந்தில்குமாா், வட்டாட்சியா் பிரியா, போ்ணாம்பட்டு வட்டாட்சியா் தேவி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மீனா, ஹேமலதா, கனகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments