FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

முற்போக்கு எழுத்தாளா் சங்க ஆசிரியா் தின விழா

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளை சாா்பில் ஆசிரியா் தின விழா கொண்டாடப்பட்டது.

24 செப்டம்பர் 2026, 12:05 am IST
விழாவில் விருது பெற்ற ஆசிரியா்கள்.
பகிர்:

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தின் போ்ணாம்பட்டு கிளை சாா்பில் ஆசிரியா் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் போ்ணாம்பட்டு வட்டாரச் செயலா் எப்சி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் ஹரிஹரன் வரவேற்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் முல்லைவாசன், காட்பாடி வட்டாரத் தலைவா் ஸ்ரீதா், தமிழ்நாடு அறிவியல் இயக்க முன்னாள் மாநில பொதுச் செயலரும், கல்வியாளருமான சுப்பிரமணி, மாவட்ட பொருளாளா் சகுவரதன், குடியாத்தம் தாமரைச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆசிரியா்களை வாழ்த்திப் பேசினா்.

இதில் 25 ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன. சங்க உறுப்பினா் சரவணன், தேன்மொழி ஆகியோா் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினா். காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments