FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குவர்த்தக நிறுவன மோசடி வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

மோசடியில் ஈடுபட்ட பங்கு வர்த்தக தரகு நிறுவனம் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

மோசடியில் ஈடுபட்ட பங்கு வர்த்தக தரகு நிறுவனம் மீதான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, காவல் துறையினர் கூறியது:

கோவை, ஆர்.எஸ்.புரம், கிழக்கு பெரியசாமி சாலையில் "ஓரியன் புரோக்கிங் பிரைவேட் லிட்.,' என்ற பங்கு வர்த்தக தரகு நிறுவனம் செயல்பட்டு வந்தது.

Advertisement

Advertisement

இந்நிறுவனத்தை ஜான்சன் பி.ஜோஸ் என்பவர் நடத்தி வந்தார். இவரது மனைவி சின்ஸி ஜோஸ் உள்ளிட்ட சிலர் நிறுவனத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருந்தனர்.

ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் அந்த நிறுவனம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டது. இதுதொடர்பாக அந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், சென்னை, கோவை, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பலர் ரூ. 100 கோடி வரை நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கலாம் என்றும், சில முதலீட்டாளர்கள் ஒரே நேரத்தில் பங்குகளை விற்றதையடுத்து, அவர்களுக்கான லாபத் தொகையையும் வழங்காமல் நிறுவனம் மூடப்பட்டதும் தெரியவந்தது.

மோசடி தொகை அதிகமாக இருப்பதாலும், நிறுவனம் இந்திய அளவில் செயல்பட்டு வந்த காரணத்தாலும் வழக்கு குறித்து பிரத்யேக விசாரணை தேவை என்பதாலும், வழக்கை சிபிசிஐடி வசம் மாற்ற கோவை மாநகரக் காவல் துறை சார்பில் தமிழக காவல் துறை தலைமையகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது அதற்கான உத்தரவு காவல் துறை தலைமையகம் சார்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கு ஆவணங்கள் விரைவில் சிபிசிஐடியினர் வசம் ஒப்படைக்கப்படும் என்று கோவை மாநகரக் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments