மாவட்ட விளையாட்டு போட்டி: எஸ்விஜிவி பள்ளி மாணவர்கள் வெற்றி
காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2-ஆம் இடம் பெற்றுள்ளனர்.
காரமடை எஸ்விஜிவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 2-ஆம் இடம் பெற்றுள்ளனர்.
கோவை கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் 19 வயதின ருக்கான பிரிவில் இப்பள்ளி மாணவர்கள் கால்பந்து போட்டியிலும், அதே வயதுப் பிரிவி ல் மாணவர் யஷ்வந்த் மேஜை பந்துப் போட்டியிலும் 2-ஆம் இடம் பெற்றனர். மேலும், 11 வயதினருக்கான சதுரங்கப் போட்டியில் மாணவர் கனிஸ்க் மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளில் 2-ஆம் இடம் பெற்று மாநிலப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெற்றுள்ளார். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் பழனிசாமி, முதல்வர் சசிகலா, உடற் கல்வி ஆசிரியர் சந்திரசேகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.