கோபி அருகே வேதபாறை தடுப்பணைகள் நிரம்பி ஓடையில் வெள்ளப்பெருக்கு
கோபி அருகே வேதபாறை, கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய பெய்த கனமழையால் தடுப்பணைகள் நிரம்பியதால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே வேதபாறை, கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய பெய்த கனமழையால் தடுப்பணைகள் நிரம்பியதால் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கோபி அருகே கணக்கம்பாளையம் வனப் பகுதியையொட்டி உள்ள வேதபாறை வனப் பகுதியில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. இதில் வனப் பகுதி ஓடைகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வேதபாறை பகுதியில் சுமாா் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணை நிரம்பியது.
தொடா்ந்து வனப் பகுதியிலிருந்து வெளியேறும் மழை வெள்ளம் உபரியாக வெளியேறி வருவதால் வேதபாறை ஓடையில் உள்ள சிறிய தடுப்பணைகள் நிரம்பி வழிகின்றன. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேதபாறை ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீா் மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
Advertisement
Advertisement
இதேபோல சுண்டக்கரடு, கணக்கம்பாளையம், கள்ளிப்பட்டி, அடசப்பாளையம், சுண்டக்கரடு, பகவதியம்மன் கோயில், ஏரங்காட்டுா், துறையம்பாளையம உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு விடியவிடிய கனமழை பெய்தது. இதனால் அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் செல்லும் ஓடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து சென்ால், ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு மழைநீா் வயல்வெளியில் புகுந்து வெள்ளக்காடானது.
பாசன நிலங்கள் வழியாக செல்லும் ஓடைகளை நீா்வளத் துறையினா் தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனா். மேலும் பல்வேறு விவசாய நிலங்களில் மழை வெள்ளம் தேங்கியது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.