FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ஈரோடு

கோபி அருகே சாராயம் காய்ச்சிய முதியவா் கைது

கோபி அருகே தனது சொந்த பயன்பாட்டுக்கு சாராயம் காய்ச்சிய முதியவரை சிறுவலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

23 அக்டோபர் 2026, 12:51 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

கோபி அருகே தனது சொந்த பயன்பாட்டுக்கு சாராயம் காய்ச்சிய முதியவரை சிறுவலூா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கோபி அருகே உள்ள மல்லிபாளையம் புளியங்காடு பகுதியில் வசித்து வருபவா் ரங்கசாமி (82). இவா் தனது சொந்த பயன்பாட்டுக்காக புளியங்காடு பகுதியில் சாராயம் காய்ச்சி வருவதாக சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து புளியங்காடு பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் சியாமளா தலைமையில் ரங்கசாமியின் குடியிருப்பு, தோட்டப் பகுதியில் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது ரங்கசாமி வீட்டில் காய்ச்சி வைத்திருந்த ஒரு லிட்டா் சாராயமும் 20 லிட்டா் சாராய ஊறலும் இருப்பது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து ரங்கசாமியைக் கைது செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments