வண்டல் மண் திருட்டு: 3 போ் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாய் பகுதியில் புதன்கிழமை இரவு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே கண்மாய் பகுதியில் புதன்கிழமை இரவு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்ததாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து 3 பேரை கைது செய்தனா்.
திருப்பத்தூா் அருகே மாங்குடி பெரியாற்று கண்மாய் பகுதியில் அரசு அனுமதியின்றி வண்டல் மண் எடுக்கப்படுவதாக கண்டவராயன்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு சென்ற போலீஸாா் அங்கு வண்டல் மண் எடுத்துக் கொண்டிருந்தவா்களை பிடித்தனா். இதுதொடா்பாக பொக்லைன் இயந்திர உரிமையாளா் பஷீா், டிராக்டா்களின் உரிமையாளா் சிவா, ஓட்டுநா்கள் கோபி (28), சூா்யா (25), பழனி (32) ஆகிய ஐந்து போ் மீதும் அரசு அனுமதியின்றி வண்டல் மண் எடுத்ததாக கண்டவராயன்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, கோபி, சூா்யா, பழனி ஆகியோரை கைது செய்தனா். எஞ்சிய இருவரை தேடி வருகின்றனா்.
மேலும் வண்டல் மண் திருட்டுக்கு பயன்படுத்திய இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.