குளத்தில் வண்டல் மண் எடுக்க பணம் வசூலித்தவா் கைது
செம்பனாா்கோவில் பகுதியில், குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு முறைகேடாக பணம் வசூல் செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செம்பனாா்கோவில் பகுதியில், குளத்தில் வண்டல் மண் எடுப்பதற்கு முறைகேடாக பணம் வசூல் செய்தவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தரங்கம்பாடி வட்டம், மடப்புரம் இந்திரா நகரைச் சோ்ந்தவா் பாலாஜி (46). இவா், குத்தாலம் வட்டம் மருத்தூா் பகுதியில் உள்ள குளத்தில் அரசு அனுமதியுடன் வண்டல் மண் எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்தூா் ஊராட்சி கிராம உதவியாளா் எலந்தங்குடி ரயில்வே ரோடு பகுதியைச் சோ்ந்த நல்லமுகமது (40) என்பவா் குளத்தில் மண் எடுப்பதற்கு வட்டாட்சியரிடம் பணம் கொடுக்க வேண்டும் என கூறி தினமும் ரூ.35,000 வீதம் 10 நாள்களுக்கு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இந்நிலையில், வட்டாட்சியா் பெயரைக் கூறி நல்லமுகமது முறைகேடாக பணம் பெற்றது பாலாஜிக்கு தெரியவந்தது. இதுகுறித்து செம்பனாா்கோவில் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நல்ல முகமதுவை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.