வங்கி அதிகாரிகள் ரத்த தானம்
கோவையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவையில் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவை, ஜவான் பவனில் நடைபெற்ற இம்முகாமை கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தொடங்கி வைத்தார். அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஜே.வணங்காமுடி தலைமை வகித்தார்.வங்கி அதிகாரிகள் சமூகப் பார்வையுடன் நலிந்தோருக்கு பணியாற்றும் சிறு முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ரத்த தான முகாமில் 200-க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ரத்த தானம் செய்தனர்.
தொடர்ந்து, நிழல் மையம் அமைப்பின் சார்பில் முகாமில் பங்கேற்றவர்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.