FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடதுசாரிகளால் மட்டுமே ஊழலற்ற ஆட்சியை வழங்க முடியும்: வி.எஸ்.அச்சுதானந்தன்

நாட்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை இடதுசாரி கட்சிகளால் மட்டுமே கொடுக்க முடியும் என கேரள மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநிலத்தின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

நாட்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை இடதுசாரி கட்சிகளால் மட்டுமே கொடுக்க முடியும் என கேரள மாநில முன்னாள் முதல்வரும், அம்மாநிலத்தின் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் கூறினார்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.ரமணியின் 100-ஆவது பிறந்த நாள் விழா கோவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 இவ்விழாவுக்கு, அக்கட்சியின் கோவை மாவட்டச் செயலர் வி.ராமமூர்த்தி தலைமை வகித்தார்.

Advertisement

Advertisement

 இதில், கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பேசியது:

 தற்போது நாட்டில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளது. இதில், முந்தைய காங்கிரஸ் அரசும், தற்போதைய பாஜக அரசும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

 தற்போதைய மத்திய அரசு தொழிலாளர்களுக்கு எதிராகவும், கர்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது. மேலும், மத்திய அரசு ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு நாட்டின் ஒற்றுமையை சீர்குலைத்து வருகிறது. கல்வி மற்றும் அரசுத் துறைகள் அனைத்தும் காவிமயமாக்கப்பட்டு வருகின்றன.

 தமிழகத்திலும் ஆட்சியில் திமுக, அதிமுக உள்ளிட்ட இரு திராவிடக் கட்சிகளும் ஊழலில் போட்டி போடுவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றன.

 எனவே, இன்றைய சூழ்நிலையில் நாட்டில் ஊழல், மதச் சார்பற்ற ஆட்சியை இடதுசாரிக் கட்சிகளால் மட்டுமே கொடுக்க முடியும் என்றார்.

 இந்நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன் எம்.பி., பி.சம்பத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments