இலைகள் மூலமாக நாற்று உற்பத்தி தொழில்நுட்பம்
மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணையில் உருவாக்கப்பட்ட இலைகள் மூலம் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் புதிய தொழில் நுட்பத்துக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணையில் உருவாக்கப்பட்ட இலைகள் மூலம் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் புதிய தொழில் நுட்பத்துக்கு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
சிறிய, நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் பொருட்டு, மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அமைச்சகம் தொழில் நிறுவனங்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, அவற்றுக்கு தேசிய அங்கீகாரம் வழங்கி வருகிறது.
அதனடிப்படையில் மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணையில் உருவாக்கப்பட்ட இலைகள் மூலம் நாற்றுக்களை உருவாக்கும் புதிய தொழில் நுட்பத்துக்கு இந்தாண்டு மத்திய அரசின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அத்துடன் இத்தொழில் நுட்பத்தை மேம்படுத்த ரூ. 6.25 லட்சம் நிதியையும் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
Advertisement
Advertisement
இதுகுறித்து ஈடன் நாற்றுப்பண்ணை நிறுவனர் எஸ்.ராஜரத்தினம் கூறியது:
விவசாயிகளுக்கு விளைச்சல் உறுதி செய்யப்பட, தரமான நாற்றுக்களை இந்த பண்ணை மூலமாக வழங்கி வருகிறோம். இலைகள்மூலம் நாற்றுக்களை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்ப முறையை தேர்ந்தெடுத்து, அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டோம். பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அந்த முயற்சிக்கு பலன் கிடைத்தது.
தொடர்ந்து இந்த தொழில்நுட்பம் கோவை வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் வணிக மேம்பாட்டுக்கழகத் துறை இயக்குநர் முருகேசன் தலைமை யில் தேர்வு செய்யப்பட்டு, அவரது பரிந்துரையின் பேரில் ஆய்விற்காக மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த தொழில்நுட்பத்தை மத்திய அரசு அங்கீகரித்துள்ளது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.