FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சோலையாறு அணை நிரம்புவதற்கு வாய்ப்புக் குறைவு

சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் இந்த வருடம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்புவதற்கு வாய்ப்பு குறைந்துள்ளது.

9 ஜனவரி 2024, 12:18 pm
பகிர்:

சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் இந்த வருடம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை நிரம்புவதற்கு வாய்ப்பு குறைந்துள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் கடந்த வருடம் ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்ய துவங்கியதால், ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் சோலையாறு அணை நிரம்பி இருந்தது. ஆனால், இந்த வருடம் மழை பொழிவுக் குறைந்து காணப்படுவதால் 145 அடியை எட்டிய அணையின் நீர்மட்டம் தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 127 அடியாக இருந்தது. இருப்பினும் தற்போது வால்பாறையில் தொடர்ந்து சாரல் மழை மட்டுமே பெய்து வருவதால் இந்த வருடம் சோலையாறு அணை நிரம்புவதற்கு வாய்ப்புக் குறைவாகவே இருப்பதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments