FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெயிண்டர் கொலை வழக்கில் இளைஞர் கைது

கோவையில் பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் கூரியர் நிறுவன ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கோவையில் பெயிண்டர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தனியார் கூரியர் நிறுவன ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது:

கோவை, தடாகம் சாலை, குமாரசாமி காலனியைச் சேர்ந்தவர் பெயிண்டர் பிரபாகரன் (55). வெள்ளிக்கிழமை மாலை ஆர்.எஸ்.புரம், பால்கம்பெனி அருகில் உள்ள காலியிடத்தில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

Advertisement

Advertisement

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவரது வீட்டருகே வசிக்கும் விக்னேஷ்குமார்(30) என்பவருக்கு இக்கொலையில் தொடர்பிருப்பது தெரிந்தது.

அதைத் தொடர்ந்து. தலைமறைவாக இருந்த விக்னேஷ்குமாரை போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "விக்னேஷ்குமாருக்கு திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில விஷயங்களைத் தெரிந்து கொண்ட பிரபாகரன், அதைக் கூறி அடிக்கடி விக்னேஷ்குமாரிடம் பணம் பெற்று வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இதே போல் பணம் கேட்டுள்ளார். இதனால் ஏற்கெனவே பிரபாகரன் மீது கோபத்தில் இருந்த விக்னேஷ்குமார் அவர், தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments