FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பேருந்தில் பெண் கழுத்திலிருந்த 10 பவுன் திருட்டு

கோவையில் பேருந்தில்  பெண் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

கோவையில் பேருந்தில்  பெண் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியது:

சேலம் மாவட்டம், ஓமலூர், டிஎன்எஸ்பி காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மனைவி ஜெகதாம்பாள்(60). ஓய்வு பெற்ற ஆசிரியை. இவர், கடந்த வெள்ளிக்கிழமை தனது மகன், மருமகளுடன் கோவை வந்தார். புருக்பாண்ட் சாலையில் உள்ள வணிக வளாகத்துக்கு அனைவரும் பொருள்கள் வாங்கச் சென்றனர்.

Advertisement

Advertisement

பிறகு அங்கிருந்து உக்கடத்துக்கு மாநகரப் பேருந்தில் சென்றனர். உக்கடம் பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கியபோது, ஜெகதாம்பாள் தனது கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments