FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மேலை நாடுகளின் பிடியிலிருந்து நமது கலாசாரத்தைப் பாதுகாக்க வேண்டும்: ஈ.ஆர்.ஈஸ்வரன்

மேலை நாடுகளின் தாக்கத்தால் அழிந்து வரும் நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மேலை நாடுகளின் தாக்கத்தால் அழிந்து வரும் நமது கலாசாரத்தை பாதுகாக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நமது கலாசாரத்தை அழிக்கும் முயற்சியில் ஒரு சில கட்சியினர், அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. அதேவேளையில், இறை வழிபாட்டை கொச்சைப்படுத்துவதும், பண்பாட்டின் அடையாளமான நமது பழக்க வழக்கங்களை மூடப்பழக்கம் என முத்திரை குத்தும் முயற்சியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Advertisement

Advertisement

உலகப் பொருளாதாரம் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்தபோதும், நமது கலாசாரமே நமது பொருளாதார வீழ்ச்சியைக் காப்பாற்றியது என உலகப் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர்.  மேலை நாடுகளின் பிடியிலிருந்து நமது பண்பாடு, கலாசாரத்தை பாதுகாக்கவே ஞாயிற்றுக்கிழமை கலாச்சாரம் காப்போம் என்ற கோவை மாநாடு நடத்தப்படுகிறது.

நலிவடைந்து வரும் ஜவுளி, விசைத்தறித் தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments