355 சிறு கோயில்களுக்கு ரூ.8.66 லட்சத்தில் பூஜை பொருள்கள்
கோவை மாவட்டத்தில் உள்ள 355 சிறு கோயில்களுக்கு ரூ.8.66 லட்சத்திலான பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டத்தில் உள்ள 355 சிறு கோயில்களுக்கு ரூ.8.66 லட்சத்திலான பூஜை உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதிலும் உள்ள பூஜை செய்ய வசதி இல்லாத சுமார் 10 ஆயிரம் சிறு கோயில்களுக்கு தலா ரூ.2,440 மதிப்பிலான பித்தளைத் தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கு விளக்கு ஆகிய 5 பூஜை உபகரணங்கள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள 355 கோயில்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி கோவை கோணியம்மன் திருக்கோயிலில் நடைபெற்றது. ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு கோயில் பூசாரிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
Advertisement
Advertisement
கோவை மாநகராட்சி மேயர் ப.ராஜ்குமார், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.சின்னசாமி, வி.சி.ஆறுக்குட்டி, கோவை மண்டல இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் இளம்பரிதி, உதவி ஆணையர் ஆனந்த் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.