கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும்: சமூக நீதி மாணவர் இயக்கம் வலியுறுத்தல்
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும் என சமூக நீதி மாணவர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாற்ற வேண்டும் என சமூக நீதி மாணவர் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமூக நீதி மாணவர் இயக்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்துக்கு அதன் மாநிலச் செயலாளர் நூர்தீன் தலைமை வகித்தார்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
கல்வியில் பல்வேறு சீர்கேடுகள் நடப்பதற்கான காரணம் இசைவுப் பட்டியலில் இருப்பதுதான். எனவே, கல்வியை பொதுப் பட்டியலில் இருந்து மாநில அரசின் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்.
ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கக்கூடிய நீட் தேர்வை தமிழக மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி அரசு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவின் முதல் கல்வி அமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆஸாத் உருவாக்கிய பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அமைப்பைக் கலைத்து விட்டு உயர் கல்வியை அமைக்க நினைக்கும் திட்டத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில துணைச் செயலாளர் பெரோஸ், தமுமுக மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமக அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் ஜைநூல் ஆபிதீன், மமக தலைமை நிலையச் செயலாளர் மாயவரம் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.