தடையை மீறி நடைப்பயணம்: 38 பேர் கைது
சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைப்பதைக் கண்டித்து பெரியநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப் பயணம் மேற்கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
சேலத்திலிருந்து சென்னை வரை 8 வழிச்சாலை அமைப்பதைக் கண்டித்து பெரியநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப் பயணம் மேற்கொண்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
எட்டு வழிச் சாலை அமைப்பதைக் கண்டித்து, கோவை மாவட்டம், பெரிய நாயக்கன்பாளையத்தில் இருந்து சேலம் வரை நடைப் பயணம் மேற்கொள்ளப்படும் என மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியினர் அறிவித்திருந்தனர். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் தடையை மீறி நடைப் பயணம் மேற்கொள்ள அக்கட்சியின் மாநிலத் தலைவர் வழக்குரைஞர் குமாரசாமி தலைமையில் பிரிக்கால் நுழைவாயில் அருகிலிருந்து பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.
பின்னர் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். அதன்பின் தடையை மீறி நடைப் பயணம் தொடங்கியது.
அப்போது பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். நடைப் பயணம் மேற்கொண்டவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து, தடையை மீறி நடைப் பயணம் மேற்கொள்ள முயன்ற 38 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.