FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நாளை வேலை நிறுத்தப் போராட்டம்: சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் அழைப்பு

ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மோட்டார் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம், மறியல்  போராட்டத்தில் பங்கேற்க

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

ஆகஸ்ட் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள மோட்டார் தொழிலாளர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம், மறியல்  போராட்டத்தில் பங்கேற்க கோவை மாவட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் (சிஐடியூ) அழைப்பு விடுத்துள்ளது. 
இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலர் ஏ.எம்.ரபீக் தெரிவித்துள்ளதாவது:
மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை திரும்பப் பெறக் கோரியும், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரியும், டோல்கேட் வசூலைக் கைவிடக் கோரியும், காப்பீட்டின் பெயரால் கூடுதல் தொகை வசூலிக்கப்படுவதை நிறுத்தக் கோரியும் மத்திய அரசை வலியுறுத்தி ஆகஸ்ட் 7ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது. 
இதில், கோவை மாவட்ட சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கத்தினர்  பங்கேற்பதுடன், அன்று காலை 10 மணிக்கு கோவை, டவுன்ஹால் பகுதியில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்திலும் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
இப்போராட்டத்தின் காரணமாக 7ஆம் தேதி அனைத்து விதமான டெம்போ, டாக்ஸி, வேன், ஆட்டோ, லாரி உள்ளிட்ட அனைத்து சாலைப் போக்குவரத்து வாகனங்களும் இயங்காது.  
எனவே, சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகளை முன்வைத்து நடத்தப்படும் இந்தப் போராட்டத்துக்கு பொது மக்களும் முழு ஆதரவளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments