பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
அன்னூர் அருகே ஆம்போதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைஅன்னூர் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அன்னூர் அருகே ஆம்போதியில் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரைஅன்னூர் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அன்னூர் அருகே, காரைக்கால்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி சாவித்ரி (27). இவரை, அதே பகுதியைச் சேர்ந்த ரங்கசாமி (35) கீரை வாங்குவதற்காக ஜூலை 27ஆம் தேதி அழைத்துள்ளார். இதையடுத்து அங்கு சென்ற சாவித்ரியை அவர் மானபங்கம் செய்ய முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து, அன்னூர் காவல் நிலையத்தில் சாவித்ரி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.