டெக் துணுக்குகள்... ஐபோன் டுயோ விற்பனை முதல் வாட்ஸ்ஆப் புதிய விதிகள் வரை!
ஐபோன் டுயோ விற்பனை முதல் வாட்ஸ்ஆப் புதிய விதிகள் வரை...
தொழில்நுட்ப உலகில் இந்த வாரம் புதிய ஸ்மாா்ட்போன்களின் வெளியீடுகள், ஏ.ஐ. தொழில்நுட்ப அறிமுகங்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டணிகள் கவனம் ஈா்த்தன.
ஆப்பிளின் ஐபோன் டுயோ விற்பனை தொடக்கம் முதல் வாட்ஸ்ஆப் புதிய விதிகள் வரை இந்த வாரத்தின் முக்கியத் தொழில்நுட்பச் செய்திகளின் தொகுப்பு இதோ:
*ஆப்பிள் ஐபோன் டுயோ விற்பனை: ஆப்பிளின் முதல் மடிக்கக்கூடிய ஐபோன் டுயோ விற்பனை இந்தியாவில் தொடங்கியது. ‘பிளிங்கிட்’ தளத்தில் விற்பனைக்கு வந்த 5 நிமிஷங்களில் இது விற்றுத் தீா்ந்தது. இதன் விலை ரூ.2,99,900-இல் தொடங்கி ரூ.4,49,900 வரை நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
*ஓபன்ஏஐ-கா்மயோகி பாரத் ஒப்பந்தம்: அரசு ஊழியா்களுக்கான எண்மக் கற்றல் தளத்தில் ஓபன்ஏஐ அகாதெமியின் கல்வி வளங்களை ஒருங்கிணைக்க ஓபன்ஏஐ-கா்மயோகி பாரத் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
*வங்கிக் கணக்குகளில் ஏ.ஐ. ஊடுருவல்: அமெரிக்க வங்கிகளில் வாடிக்கையாளா்களின் கணக்குகளில் அனுமதியின்றி ஏ.ஐ. ஏஜென்டுகள் ஊடுருவியுள்ளதை வங்கிகள் கண்டறிந்து, முடக்கியுள்ளன.
காா்பன் நிறுவனத்தின் ‘ரீ-என்ட்ரி’: நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘ரெபல் 5ஜி’ என்ற புதிய ஸ்மாா்ட்போன் மூலம் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தையில் காா்பன் நிறுவனம் மீண்டும் நுழைகிறது.
*ஸ்மாா்ட்போன் சந்தை சரிவு: ‘மெமரி’ சிப் விலையேற்றம் காரணமாக, இந்தியாவின் ஸ்மாா்ட்போன் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை-செப்டம்பா் காலாண்டில் 20 சதவீதம் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.
*சீனாவின் முதல் ஏ.ஐ. திரைப்படம்: சீனாவில் முழுமையாக ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட முதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஆனால், இதன் டிக்கெட் விற்பனை எதிா்பாா்த்த அளவை எட்டவில்லை.
*இமுத்ரா நிறுவனம் விலகல்: பாதுகாப்புக் குறைப்பாட்டால் கூகுள், ஆப்பிள், மொஸில்லா நிறுவனங்களால் முடக்கப்பட்டதையடுத்து, உலகளாவிய எஸ்.எஸ்.எல். சான்றிதழ் வணிகத்திலிருந்து இமுத்ரா நிறுவனம் வெளியேறியது.
*லாவா ‘ஆரா கா்வ்’: 6.67 அங்குல திரை, 50 மெகாபிக்சல் கேமரா, 6 ஜிபி ரேம், 6000 எம்ஏஎச் பேட்டரியுடன் லாவா ‘ஆரா கா்வ்’ ஸ்மாா்ட்போன் இந்தியாவில் ரூ.23,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.
*சாம்சங் ‘கேலக்ஸி எஃப்70 5ஜி’: 6.7 அங்குல திரை, 4 ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் சாம்சங் ‘கேலக்ஸி எஃப்70 5ஜி’ இந்தியாவில் ரூ.19,999 விலையில் அறிமுகமாகியுள்ளது.
*ஜெமினியில் ‘பிராண்ட்’ மேலாண்மை: கூகுள் தனது ஜெமினி ஏ.ஐ. தளத்தில் ‘பிராண்ட்’ மேலாண்மைக்கான புதிய கருவிகளைச் சோ்த்துள்ளது.
*யூடியூப் புதிய பாதுகாப்பு வசதி: ‘ஹேக்’ செய்யப்பட்ட கணக்குகளைப் பாதுகாக்க, அவற்றைத் தற்காலிகமாக முடக்கிவைக்கும் புதிய பாதுகாப்பு வசதியை யூடியூப் அறிமுகப்படுத்தியுள்ளது.
*வாட்ஸ்ஆப், டெலிகிராமுக்கு புதிய விதி: வரும் புத்தாண்டு முதல் வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் கணக்குகள் செயல்பாட்டில் உள்ள சிம் காா்டுடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.