FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மூதாட்டியிடம் 4 பவுன் பறிப்பு

சூலூரில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

சூலூரில் மூதாட்டியிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் ஞாயிற்றுக்கிழமை பறித்துச் சென்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாப்பிரெட்டி. இவரது மனைவி வையம்மாள் (60). இவர்கள் இருவரும் சூலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள திருமால் நகரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு விடுமுறைக்காக வந்துள்ளனர். 
இந்நிலையில், பால் வாங்குவதற்காக வையம்மாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்து சென்று கொண்டுடிருந்தார். அப்போது அவ்வழியே, இருசக்கர வாகனத்தில்  தலைக் கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் வையம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். 
இதுகுறித்த புகாரின் பேரில் சூலூர் காவல் உதவி ஆய்வாளர் மனோஜ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments