ஊத்தங்கரை அருகே காணாமல் போன 7ம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்பு!
காணாமல் போன 7ம் வகுப்பு மாணவன் சென்னையில் மீட்கப்பட்டது தொடர்பாக...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே காணாமல் போன 7 ஆம் வகுப்பு மாணவன், சென்னையில் மீட்கப்பட்டுள்ளார்.
ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை இந்தியன் வங்கி தெருவைச் சோ்ந்தவர் திருநாவுக்கரசு. இவர், அதே பகுதியில் பேக்கரி வைத்துள்ளார். இவரது மகன் சஞ்சய் (12), ஊத்தங்கரையில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், வெள்ளிக்கிழமை மாலை பள்ளியில் இருந்து வீடுதிரும்பியப் பிறகு, டியூஷன் செல்வதாகக் கூறி சென்றுள்ளார். நீண்டநேரம் ஆகியும் சஞ்சய் வீடுதிரும்பாததால், அவரது பெற்றோா் சிங்காரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
Advertisement
Advertisement
இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் ஒருபகுதியாக அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், சிறுவன் சஞ்சய் அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு செல்வது கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து, அவரை அழைத்துச் சென்றது யார்?, சிறுவன் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், காணாமல் போன 12 வயது சிறுவன் சஞ்சய் சென்னையில் உள்ள புளியந்தோப்பு பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்.
அந்தச் சிறுவன், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு செல்ல ஆட்டோவில் ஏறியபோது, ஓட்டுநருக்கு சந்தேகம் ஏற்பட்ட நிலையில், சிறுவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்னைக்கு வந்ததாக, சிறுவன் போலீஸாரிடம் தகவல் தெரிவித்துள்ளார். சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
A 7th grade student who went missing near Uthankarai, Krishnagiri district, has been rescued in Chennai.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.