வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை
வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பழனி ஆகிய ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோல, கேரள மாநிலம், சாலக்குடிக்கும் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தன. வால்பாறை பகுதியில் வசிப்பவர்களில் 40 சதவீதம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற பேருந்து மலைப் பாதையில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்துக்கு பின்னர், சாலக்குடி வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக வால்பாறை போக்குவரத்து கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழித்தடத்தில் தனியார் பேருந்தும் செல்வதால், அரசுப் பேருந்து வசூல் குறைந்துள்ளது. அதனால் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.