தலைக்கவச விழிப்புணர்வுப் பேரணி
மதுக்கரையை அடுத்த க.க.சாவடி காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுக்கரையை அடுத்த க.க.சாவடி காவல் துறை சார்பில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் க.க.சாவடி காவல் துணை ஆய்வாளர்கள் பிரபாகரன், ரவிக்குமார் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தனர்.
ஸ்ரீ நாராயணகுரு கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி, பாலக்காடு சாலையில் உள்ள எட்டிமடையில் நிறைவடைந்தது.
நிகழ்வில், ஸ்ரீ நாராயணகுரு கலைக் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், க.க.சாவடி காவல் துறையினர், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.