பராமரிப்புப் பணி: கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் 18 நாள்களுக்கு ரத்து
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் சேவை வியாழக்கிழமை (டிசம்பர் 20) முதல்
பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கோவை - சேலம் பாசஞ்சர் ரயில் சேவை வியாழக்கிழமை (டிசம்பர் 20) முதல் 18 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வேயின் சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.
ஈரோடு - தொட்டிப்பாளையம் இடையேயும், இருகூர் பகுதியிலும் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் டிசம்பர் 19ஆம் தேதி முதல் ஜனவரி 6-ஆம் தேதி வரை சில ரயில் சேவைகள் மாற்றி அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை - சேலம் இடையிலான பாசஞ்சர் ரயில் (எண்கள் 66602 - 66603) டிசம்பர் 20ஆம் தேதி முதல் ஜனவரி 6ஆம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், ஆலப்புழை - தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) கோவை - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே 45 நிமிடங்களும், எர்ணாகுளம் - பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12678) 15 நிமிடங்களும் (ஜனவரி 4, 5-ஆம் தேதிகளைத் தவிர்த்த நாள்களில்) தாமதமாகச் செல்லும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.