வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன், ரூ. 10 ஆயிரம் திருட்டு
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவை மாச்சாம்பாளையம் அம்மணியம்மாள் காலனியைச் சேர்ந்தவர் ஆப்ரஹாம் ஜெயக்குமார் (30), தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.
இந்நிலையில், அவர் செவ்வாய்க்கிழமை காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்கக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 6 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் திருடுபோனது தெரியவந்தது. இது குறித்து குனியமுத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.