FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 75 போலீஸாருக்கு பரிசோதனை

கோவையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 75 போலீஸாருக்கு வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கோவையில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்ட 75 போலீஸாருக்கு வியாழக்கிழமை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவ பணியாளா்கள், போலீஸாா், சுகாதார பணியாளா்களின் பாதுகாப்புக் கருதி அவா்களுக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தமிழக-கேரளா எல்லையான வாளையாறு பகுதியில் ரேபிட் கிட் கருவி மூலம் அங்கு பணியில் இருந்த போலீஸாருக்கு சில நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, கோவை மாநகர தெற்கு காவல் எல்லைகளில் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 75 பேருக்கு போத்தனூா் ரயில் நிலையம் அருகே சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பி.சி.ஆா். கருவி மூலம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

தெற்கு உதவி ஆணையாளா் செட்ரிக் மனுவேல் தலைமையில் இந்தப் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் 48 மணி நேரத்திற்கு பின் தெரிவிக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments