FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கோவை கோட்டத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் ரூ.90 கோடி வருவாய் இழப்பு

கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் கோவை கோட்டத்தில் 30 நாள்களில் ரூ.90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

27 ஜனவரி 2024, 10:01 pm IST
பகிர்:

கரோனா நோய்த்தொற்று காரணமாக அரசுப் பேருந்துகள் இயங்காததால் கோவை கோட்டத்தில் 30 நாள்களில் ரூ.90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக மாா்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கோவையில் பேருந்துகள், காா்கள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களின் இயக்கம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் கோவை நகரச் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

பேருந்துகள் இயக்கப்படாததால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பு குறித்து அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவை கோட்ட அதிகாரிகள் கூறியது:

Advertisement

Advertisement

அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை கோட்டத்தில் கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இந்த 4 மண்டலங்களிலும் 2,712 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நடத்துநா்கள், ஓட்டுநா்கள், பணிமனைப் பணியாளா்கள் என 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா்.

ஊரடங்கு உத்தரவால் மாா்ச் 24ஆம் தேதி முதல் அனைத்துப் பேருந்துகளும் அந்தந்தப் பகுதியில் உள்ள பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் கோவை கோட்டத்துக்கு ஒரு நாளைக்கு ரூ. 3 கோடி வீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், மாா்ச் 24 முதல் ஏப்ரல் 23 வரை 30 நாள்களில் ரூ. 90 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments