FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பராமரிப்புப் பணி: கேரள ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது..

Updated On : 9 மார்ச் 2025, 3:40 am IST
ரயில் - (கோப்புப்படம்)
பகிர்:

சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பல இடங்களில் ரயில் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கேரள ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஆலப்புழையில் இருந்து மாா்ச் 10, 12, 15 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்படும் ஆலப்புழை - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும்.

இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும்.

Advertisement

Advertisement

இதேபோல, எா்ணாகுளத்தில் இருந்து மாா்ச் 10,12, 15 ஆகிய தேதிகளில் காலை 9.10 மணிக்குப் புறப்படும் எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) போத்தனூா், இருகூா் வழியாக இயக்கப்படும். இதனால், இந்த ரயிலானது கோவை நிலையம் செல்வது தவிா்க்கப்படும். போத்தனூா் கூடுதல் நிறுத்தமாகச் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments