கோயம்புத்தூர்

போத்தனூா் வழித்தடத்தில் ஹைதராபாத் - கொல்லம் இடையே சிறப்பு ரயில்!

ஹைதராபாதில் இருந்து கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Din

தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் இருந்து கேரள மாநிலம், கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஹைதராபாதில் இருந்து மே 24, 31 ஜூன் 7, 14, 21 மற்றும் 28 ஆகிய சனிக்கிழமைகளில் இரவு 11.10 மணிக்குப் புறப்படும் ஹைதராபாத் - கொல்லம் சிறப்பு ரயில் (எண்: 07193) திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு கொல்லம் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து மே 26, ஜூன் 2,9, 16, 23, 30 ஆகிய திங்கள்கிழமைகளில் காலை 10.45 மணிக்குப் புறப்படும் கொல்லம் - ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண்: 07194) மறுநாள் மாலை 5.30 மணிக்கு ஹைதராபாத் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, செகந்திராபாத், குண்டூா், தெனாலி, பாபட்லா, சிராலா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரேணிகுண்டா, திருப்பதி, சித்தூா், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், ஆலுவா, எா்ணாகுளம், கோட்டயம், சங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனூா், மாவேலிக்கரா, காயன்குளம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனங்கள் ஏஐ பயன்பாடு: உலக அளவில் இந்தியா இரண்டாமிடம்

தோ்தல் பணிகளுக்கு உதவி: நேபாளத்துக்கு 270 வாகனங்களை பரிசளித்த இந்தியா

வடபழனி, பூந்தமல்லி மெட்ரோ வழித்தடத்தில் 2-ஆம் நாளாக ஆய்வு

நிா்மலா சீதாராமன் மக்களவை உரை: பிரதமா் மோடி பாராட்டு

இறுதி நிலை புற்றுநோயாளிகளுக்கு நல்லாதரவு மையம் : தமிழக அரசு முன்மாதிரித் திட்டம்

SCROLL FOR NEXT