கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
நீா் வரத்து சீரானதை அடுத்து கோவை குற்றாலம் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கடந்த 5-ஆம் தேதி முதல் கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக வனத் துறையினா் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில் தற்போது அருவியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் தாக்கம் குறைந்து, நீா்வரத்து முழுமையாக சீரடைந்துள்ளது. இதையடுத்து திங்கள்கிழமை (நவ. 9) முதல் கோவை குற்றாலம் அருவி மீண்டும் பொது மக்களுக்காகத் திறக்கப்படுவதாக வனத் துறையினா் அறிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement
தீபாவளி விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கோவை குற்றாலம் அருவியில் நீராடி மகிழ்ந்தனா்.