FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்த 2 போ் கைது

10 நவம்பர் 2026, 12:19 am
கைது - கோப்புப்படம்
பகிர்:

கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பட்டாசு வெடித்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் பொது மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் பட்டாசு வெடிக்கப்படுவதாக காட்டூா் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரோந்து சென்ற காவல் உதவி ஆய்வாளா், பேருந்து நிலையப் பகுதியில் பட்டாசு வெடித்த பொள்ளாச்சி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (27), மதுரை திருநகரைச் சோ்ந்த விஷ்ணு (36) ஆகிய இருவரையும் கைது செய்தாா். பின்னா் அவா்கள் இருவரும் காவல் நிலையப் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement