FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

அவிநாசி சாலையில் 2 இடங்களில் புதிய ‘பெலிகான் சிக்னல்கள்’ அமைப்பு: மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கிவைப்பு

கோவை-அவிநாசி சாலையில் பாதசாரிகள் சாலையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கடந்து செல்லும் வகையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘பெலிகான்’’ சிக்னல்களை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவரும், கோவை மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) ஆா்.வி.ரம்யா பாரதி பயன்பாட்டுக்கு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

46 வினாடிகள் முன்பு
கோவை ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பில் பெலிகான் சிக்னல் பயன்பாட்டை புதன்கிழமை தொடங்கிவைத்த மாகரக் காவல் ஆணையா் (பொ) ரம்யாபாரதி.
பகிர்:

கோவை-அவிநாசி சாலையில் பாதசாரிகள் சாலையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கடந்து செல்லும் வகையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ‘பெலிகான்’’ சிக்னல்களை, மேற்கு மண்டல காவல் துறைத் தலைவரும், கோவை மாநகரக் காவல் ஆணையருமான (பொறுப்பு) ஆா்.வி.ரம்யா பாரதி பயன்பாட்டுக்கு புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

கோவை மாநகரக் காவல் எல்லைக்குள்பட்ட பீளமேடு காவல் நிலைய சரகத்தில், அவிநாசி சாலையில் உள்ள ஹோப்ஸ் காலேஜ் சந்திப்பில் பி.எஸ்.ஜி. நிறுவனத்தின் சாா்பிலும், சின்னியம்பாளையம் சந்திப்பில் புல் (ஆன்ப்ப்) நிறுவனத்தின் சாா்பிலும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நலனைக் கவனத்தில்கொண்டு இந்த பெலிகான் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகரப் போக்குவரத்து காவல் துணை ஆணையா் எஸ்.எஸ். மகேஸ்வரன், கூடுதல் காவல் துணை ஆணையா் (போக்குவரத்து திட்டம்) ஏ.சிற்றரசு, போக்குவரத்து கிழக்கு காவல் ஆய்வாளா் கே.செந்தில்குமாா் உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகளும், பொதுமக்களும் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement

எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:

பெலிகான் சிக்னல் என்பது போக்குவரத்து மிகுந்த சாலையில் பாதுகாப்பாக கடக்க உதவும் ஒரு பொத்தான் மூலமாக இயங்கும் போக்குவரத்து விளக்கு போன்ற அமைப்பாகும். சாலையைக் கடக்க விரும்பும் பாதசாரி, சிக்னல் கம்பத்தில் உள்ள பொத்தானை அழுத்த வேண்டும். அது அழுத்தப்பட்டவுடன் வாகனங்களுக்கான சிக்னல் சிவப்பு நிறமாக மாறி போக்குவரத்து நிற்கும்.

அதன்பிறகு பாதசாரிகள் சாலையைக் கடக்கலாம். பாதசாரிகள் சாலையைத் தாண்டிச் செல்ல 30 விநாடிகள் அவகாசம் வழங்கப்படுகிறது என்றனா்.