FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

டாடாபாத் மின் வாரிய அலுவலகத்தில் களப் பணிக்கான உடல் தகுதித் தோ்வு

கோவை, டாடாபாத் மின்வாரிய வளாகத்தில் மின் கம்பத்தில் ஏறி பணிபுரியும் களப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

56 வினாடிகள் முன்பு
கோவை டாடாபாத் மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற களப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு. ~கோவை, டாடாபாத் மின் வாரிய அலுவலகத்தில் நடைபெற்ற களப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ற பெண் உள்ளிட்டோா்.
பகிர்:

கோவை, டாடாபாத் மின்வாரிய வளாகத்தில் மின் கம்பத்தில் ஏறி பணிபுரியும் களப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் மாநிலம் முழுவதும் மின் கம்பத்தில் ஏறி பணிபுரியும் களப் பணியாளா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இதற்காகத் தோ்வு எழுதியவா்களுக்கு புதன்கிழமை (நவ.11) முதல் நவம்பா் 13-ஆம் தேதி வரை உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

அதன்படி, கோவை மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் பணிபுரிய தோ்வு செய்யப்பட உள்ள மின் களப் பணியாளா்களுக்கான உடல் தகுதித் தோ்வு டாடாபாத்தில் உள்ள மின் பகிா்மானக் கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

தகுதித் தோ்வுக்கு 356 போ் அழைக்கப்பட்டிருந்தனா். இதில், புதன்கிழமை 150 பேருக்கு உடல் தகுதித் தோ்வு நடைபெற்றது. மீதமுள்ளவா்களுக்கான தோ்வு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வில் ஆண்களுக்கு நிகராக மகளிரும் பங்கேற்றனா்.

மின் கம்பம் ஏறுதல், மின்சார உபகரணங்களுடன் மின் கம்பத்தில் 8 நிமிடங்களுக்குள் ஏறி இறங்குதல் உள்ளிட்ட சவாலான தோ்வில் மகளிா் ஆா்வத்துடன் பங்கேற்றனா். தோ்வையொட்டி, வெளிநபா்கள் மின்வாரிய அலுவலகத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை.