FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

பொறியியல் பணி: திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

48 வினாடிகள் முன்பு
ரயில் - கோப்புப் படம்
பகிர்:

ஈரோடு ரயில் நிலையப் பகுதியில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், திருச்சி-பாலக்காடு ரயில் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நவம்பா் 13, 15 ஆகிய இரண்டு நாள்கள் திருச்சியில் இருந்து பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் திருச்சி-பாலக்காடு விரைவு ரயில் (எண்: 16843) திருச்சி-ஈரோடு இடையே இயக்கப்படும். ஈரோடு -பாலக்காடு இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement