குடும்பத் தகராறில் விஷம் குடித்த தாய் உயிரிழப்பு; மகளுக்கு தீவிர சிகிச்சை
வடவள்ளி அருகே குடும்பத் தகராறில் இருவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாய் உயிரிழந்தாா்.
வடவள்ளி அருகே குடும்பத் தகராறில் இருவா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாய் உயிரிழந்தாா்.
கோவை மாநகா், வடவள்ளி பாத்ரா நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இவா் சொந்தமாக அழகு நிலையம் நடத்தி வருகிறாா். தொழில் விரிவாக்கம் செய்வதற்காக மனைவி கீதாவிடம் (33) நகையை வாங்கி அடகு வைத்ததுடன், தீபாவளிக்குள் மீட்டுத் தருவதாக நாகராஜ் கூறியிருந்தாா்.
ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் நகையை மீட்டுத்தர முடியாததால் கடந்த 7-ஆம் தேதி முதல் நாகராஜ் வீட்டுக்கு வரவில்லை. கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அணைத்து வைக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
நகை மீட்கப்படாததாலும், வருமானம் இல்லாததாலும் தீபாவளிக்கு புத்தாடை எடுக்கக்கூட முடியாமல் மனவேதனையில் இருந்த கீதாவுக்கு தாய் லட்சுமி (65) ஆறுதல் கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில், வீட்டில் விஷம் குடித்து செவ்வாய்க்கிழமை கீதா மயங்கிக் கிடந்தாா். இதைப் பாா்த்த தாய் லட்சுமியும் கீதா குடித்து மீதம் வைத்திருந்த விஷத்தை எடுத்து குடித்துள்ளாா்.
தகவலறிந்து அப்பகுதி மக்கள் சென்று இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் லட்சுமி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா். கீதாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வடவள்ளி காவல் உதவி ஆய்வாளா் இருளப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.