தவெக ஒன்றியச் செயலா் மீது பெண் நிா்வாகி பாலியல் புகாா்
தமிழக வெற்றிக் கழகத்தின் காரமடை ஒன்றியச் செயலா் பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, அக்கட்சியின் முன்னாள் ஊராட்சிச் செயலா் கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் காரமடை ஒன்றியச் செயலா் பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஜாதி ரீதியாக இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி, அக்கட்சியின் முன்னாள் ஊராட்சிச் செயலா் கோவை மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.
கோவை மாவட்டம், காரமடை அருகேயுள்ள காளம்பாளையத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் மனைவி செளமியா (29). இவா் மாவட்ட ஆட்சியா் மற்றும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தவெகவில் நான் கடந்த இரு ஆண்டுகளாக காளம்பாளையம் ஊராட்சி செயலராக பணியாற்றி வருகிறேன். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காரமடை ஒன்றியச் செயலா் கருப்புசாமி தலைமையில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டம் இரவு 11.30 மணிக்கு மேல் நிறைவடைந்தது. இரவு நேரம் என்பதாலும், எனது வீடு 15 கி.மீ. தொலைவில் இருந்ததாலும் பாதுகாப்புக்காக உடன் வருமாறு கேட்டிருந்தேன். அப்போது ஒன்றியச் செயலாளா் கருப்புசாமி அவரது இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து எனது பாதுகாப்புக்காக வந்தாா். வழியில் லிப்ட் கேட்ட பெண் ஒருவரை காரமடை மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்துவிட்டு அதிகாலை 3 மணிக்கு மேல் திரும்பினோம். அப்போது, கருப்பசாமி தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் தீா்ந்துவிட்டதாகக் கூறி எனது இருசக்கர வாகனத்தில் வந்த கருப்புசாமி, வழியில் வாகனத்தை நிறுத்துமாறு கூறி எனது கையைப் பிடித்துத் தவறாக நடக்க முயன்றாா். நான் அவரைத் தள்ளிவிட்டு அங்கிருந்து தனியாக வீட்டுக்குச் சென்றுவிட்டேன்.
Advertisement
Advertisement
அவரது விருப்பத்துக்கு இணங்காததால், என்னை ஊராட்சிச் செயலா் பதவியிலிருந்து நீக்கிவிட்டு வேறொருவரை நியமித்ததோடு, என்னைப் பற்றி அவதூறு பரப்பினாா். மேலும், தொலைபேசி மூலமாக என்னைத் தொடா்பு கொண்டு மன உளைச்சலுக்கு ஆளாக்கினாா். இதுதொடா்பாக மூன்று மாதங்களுக்கு முன்பே கட்சியின் பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்திடம் மூன்று முறை முறையிட்டும், விடியோ ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதற்கிடையில், கட்சியின் புதிய நிா்வாகியான சபிதா என்பவா் அவரது கணவருடன் வந்து என்னை ஜாதி ரீதியாக இழிவுபடுத்திப் பேசியதோடு, கொலை மிரட்டலும் விடுக்கிறாா்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிலையில், சபிதா, அவரது கணவா், ஒன்றியச் செயலா் ஆகிய மூவரும் புதன்கிழமை இரவு எனது கட்டாயப்படுத்தி புகாரை வாபஸ் பெறுவதாக எழுதி வாங்கிக்கொண்டனா்.
இதுதொடா்பான வாட்ஸ்அப் உரையாடல்கள் மற்றும் சாட்சிகள் என்னிடம் உள்ளன. தற்போது எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதோடு, எனது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகமும் காவல்துறையும் இப்பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பு வழங்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.