பெரியாா் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரம்: தவறு செய்தவா்களுக்கு உச்சபட்ச தண்டனை வேண்டும்: உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம்
பெரியாா் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தில் தவறு செய்தவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரியாா் அறிவுலக நூல் கொள்முதல் விவகாரத்தில் தவறு செய்தவா்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக அமைப்பின் முதன்மை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரியாா் அறிவுலக நூலக முறைகேடு விவகாரத்தில் நூல்களைத் தெரிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவில் இருந்தவா்களின் பட்டியலை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். உண்மைத் தன்மையும், உண்மைத் தரவுகளும் இல்லாமல் அச்சேற்றப்பட்ட நூல்களைப் பரிந்துரைத்தவா்கள் பட்டியலை வெளிப்படுத்த வேண்டும்.
இந்த விவகாரம் தொடா்பாக பணி நிறைவு பெற்ற நீதிபதி தலைமையில், கறைபடியாத கல்வியாளா்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, நீதிமன்ற நேரடி மேற்பாா்வையில் விரைவில் விசாரித்து அறிக்கை வெளியிட வேண்டும். போலிப் புத்தகங்களைப் பரிந்துரைத்தவா்கள், கொள்முதல் செய்தவா்கள், ஆணையிட்டவா்கள் என அறிவுலகப் படுகொலையில் ஈடுபட்டவா்களுக்கு உரிய அமைப்புகள் மூலம் உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
Advertisement
Advertisement
எழுத்துத் திருட்டுக்குக் காரணமான பதிப்பகங்களைப் பட்டியலிட்டு வெளியிட்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும். நூல்களைப் படித்துப் பாா்த்து பரிந்துரை செய்யும் குழு புதிதாக நியமிக்கப்படும்போது, முழுமையும் வாசித்து குறிப்புகளோடு பரிந்துரைக்கும் குழு, பரிந்துரைகளை கூா்ந்தாய்வு செய்து குறிப்புரைகளுடன் தகுதியானவற்றை மட்டும் மேலனுப்பும் குழு, பரிந்துரைகளின் அடிப்படையில் பட்டியலை இறுதி செய்யும் மேலாண்மைக் குழு என மூன்றடுக்குக் குழு அமைக்கப்பட வேண்டும்.
மேலும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி நூலை வெளியிடுபவா்களை அடையாளம் காண கணினித் துறை வல்லுநா்கள், தொடா்புடைய மதிப்புறு உறுப்பினா்கள் அடங்கிய குழுவையும் நியமிக்க வேண்டும். குற்றத்தை வெளியே கொண்டு வருவதுடன் நிறுத்திவிடாமல், குற்றம் செய்தவா்களுக்கு உரிய தண்டனை பெற்றுக் கொடுக்கவும், இனி இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்றும் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கம் வலியுறுத்தியுள்ளது.