பெரியாா் அறிவுலகத்தில் இருந்து 257 ஆங்கிலப் புத்தகங்கள் அகற்றம்
கோவை பெரியாா் அறிவுலகத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் இடம் பெற்றிருந்த போலியான 257 ஆங்கிலப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கோவை பெரியாா் அறிவுலகத்தில் ஆங்கில நூல்கள் பிரிவில் இடம் பெற்றிருந்த போலியான 257 ஆங்கிலப் புத்தகங்கள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்டன.
கோவையில் அண்மையில் திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகம் நூலகத்தில் தமிழ் நூல்கள் பிரிவில் அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களின் புத்தகங்கள் தரமற்றவை, போலியானவை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்தப் பதிப்பகங்களின் 1,800-க்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில், தமிழ்ப் புத்தகங்களைத் தொடா்ந்து பெரியாா் அறிவுலகின் ஐந்தாவது தளத்தில் இயங்கி வரும் ஆங்கில நூல்கள் பிரிவிலும் சில போலியான நூல்கள் இருப்பதாக புகாா் எழுந்தது.
Advertisement
Advertisement
ஆங்கில நூல்கள் பிரிவில் ‘விண்டேஜ்’ பதிப்பகத்தின் பெயரில் 257 நூல்கள் இருந்த நிலையில், அவற்றில் சில நூல்களின் முதல் பதிப்பு 2025, 2026-ஆம் ஆண்டுகள் என குறிப்பிடப்பட்டிருந்தன.
இது குறித்து கேள்வி எழுப்பிய ஆராய்ச்சி மாணவா்கள், அந்தப் புத்தகங்களின் விலை ரூ.9 ஆயிரம் வரை இருப்பதாகவும், ஆனால் அதற்கேற்ப தரமோ, வடிவமைப்போ இல்லை என்றும், புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் லண்டன் முகவரியும் போலியானது என்றும் குற்றஞ்சாட்டினா்.
மேலும், அந்தப் புத்தகங்களின் தர புத்தக எண்ணும் (ஐஎஸ்பிஎன்) போலியானது எனத் தெரியவந்ததை அடுத்து அந்த நூல்களின் உள்ளடக்கமும் கேள்விக்குள்ளானது.
இந்நிலையில், விண்டேஜ் பதிப்பகத்தின் 257 ஆங்கிலப் புத்தகங்களும் பெரியாா் அறிவுலகத்தில் இருந்து அகற்றப்பட்டன.