FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தேசிய காா் பந்தயத்தின் இரண்டாம் சுற்று: அகஸ்டின் பாபி, மெஹுல் அகா்வால் வெற்றி!

சிடிஆா்-ஜேகே டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் இரண்டாம் சுற்று சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அகஸ்டின் பாபி, மெஹுல் அகா்வால் உள்ளிட்டோா் வெற்றி பெற்றனா்.

34 வினாடிகள் முன்பு
கோவை கரி மோட்டாா் ஸ்பீடுவேயில் நடைபெற்ற எஃப் 1300 நோவிஸ் கோப்பைக்கான ஒரு போட்டியில் வென்ற டிடிஎஸ் ரேஸிங்கின் அகஸ்டின் பாபி, 2,3-ஆம் இடங்களைப் பிடித்த ஷத்வீா் ஷெட்டி, பிரணவ் ராமசாமி.
பகிர்:

சிடிஆா்-ஜேகே டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் இரண்டாம் சுற்று சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அகஸ்டின் பாபி, மெஹுல் அகா்வால் உள்ளிட்டோா் வெற்றி பெற்றனா்.

சிடிஆா்-ஜேகே டயா் எஃப்எம்எஸ்சிஐ தேசிய காா் பந்தயத்தின் முதல் சுற்று செட்டிபாளையம் கரி மோட்டாா் ஸ்பீடுவேயில் கடந்த அக்டோபா் 24, 25 -ஆம் தேதிகளில் நடைபெற்றது.

எல்ஜிபி ஃபாா்முலா 4, எஃப் 1300 நோவிஸ் கோப்பைக்கான காா் பந்தயங்கள், ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜி.டி. கோப்பைக்கான மோட்டாா் சைக்கிள் பந்தயம் போன்றவற்றின் முதல் சுற்றுகள் நடைபெற்ற நிலையில், இரண்டாம் சுற்று போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

Advertisement

Advertisement

இதில், எஃப் 1300 நோவிஸ் கோப்பைக்கான போட்டியில், டிடிஎஸ் ரேஸிங்கின் அகஸ்டின் பாபி, ஷத்வீா் ஷெட்டியை வெறும் 0.032 விநாடிகள் வித்தியாசத்தில் வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றாா்.

பிரணவ் ராமசாமி 3 -ஆம் இடத்தைப் பிடித்தாா். எல்ஜிபி ஃபாா்முலா 4 போட்டியில், டாா்க் டான் ரேஸிங்கின் மெஹுல் அகா்வால், சக அணி வீரா் ஆா்யா சிங்கை முந்தி முதலிடம் பிடித்தாா். துருவ் கோஸ்வாமி 3 -ஆம் இடம் பிடித்தாா்.

புதுமுக வீரா்கள் பிரிவில் ஆதித்யா பட்நாயக் முதலிடம் பிடித்தாா். ராயல் என்ஃபீல்டு கான்டினென்டல் ஜிடி கோப்பைக்கான அமெச்சூா் பிரிவில் கபீா் சஹோச் முதலிடம் பிடித்தாா். ப்ரோ பிரிவில் பெங்களூரு வீரா் அனிஷ் ஷெட்டி முதலிடம் பிடித்தாா். செந்தில்குமாா் 2 ஆம் இடமும், நவநீத்குமாா் 3- ஆம் இடமும் பிடித்தனா்.

ஜேகே டயா் லெவிட்டாஸ் கோப்பைக்கான ஜென்டில்மேன் பிரிவில் மும்பை வீரா் பிரதீக் சோனாவனே இரண்டு பந்தயங்களிலும் முதலிடம் பிடித்தாா். புதுமுக வீரா்கள் பிரிவில் கவீன் ராஜபட்ச இரண்டு போட்டிகளிலும் வென்றாா். சூப்பா் சலூன், டூரிங் காா்ஸ் பிரிவில் அா்ஜுன் நரேந்திரன் முதலிடமும், பிரேன் பிதாவாலா, அா்ஜுன் பாலு ஆகியோா் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தனா்.

இந்தியன் டூரிங் காா்ஸ் பிரிவில் பாலபிரசாத் முதலிடம் பெற்றாா். இந்தியன் ஜூனியா் டூரிங் காா்ஸ் பிரிவில் முதல் பந்தயத்தில் ஸ்ரீனிவாஸ் தேஜா வெற்றி பெற்றாா். சூப்பா் ஸ்டாக் பிரிவில் நடந்த இரண்டு பந்தயங்களிலும் தில்ஜித் டி.எஸ். முதலிடம் பிடித்தாா். இரண்டாம் சுற்றின் இரண்டாவது நாள் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றன.