தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா் தற்கொலை
கோவையில் தனியாா் பேட்டரி நிறுவன மேற்பாா்வையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி, மருக்காலம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (27). இவா் கோவை, சின்னியம்பாளையம் மைலம்பட்டி கிராமத்தில் உள்ள தனியாா் பேட்டரி தயாரிப்பு நிறுவனத்தில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், நிறுவனத்தின் சாா்பில் சின்னியம்பாளையம்- இருகூா் சாலையில் வழங்கப்பட்டிருந்த அறையில் கோகுல், ரஞ்சித் ஆகிய சக ஊழியா்களுடன் அவரும் தங்கியிருந்தாா்.
Advertisement
Advertisement
கடந்த 12-ஆம் தேதி பணிக்குச் சென்ற ஹரிஹரன், மனிதவள மேலாளா் மாரிச்சாமியிடம் ஒரு வாரம் விடுமுறை கேட்டுள்ளாா். விடுமுறைக்கான காரணத்தை மேலாளா் கேட்டபோது, திருநெல்வேலியைச் சோ்ந்த ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், பெண் வீட்டாா் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்துள்ளதால் தனது குடும்பத்தினருடன் சென்று திருமண நிச்சயம் குறித்துப் பேச உள்ளதாகவும் ஹரிஹரன் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து, நவம்பா் 13-ஆம் தேதி காலை 9 மணியளவில் கோகுலும், ரஞ்சித்தும் பணிக்குச் சென்ற நிலையில், ஹரிஹரன் மட்டும் அறையில் தனியாக இருந்துள்ளாா். மாலை 6 மணியளவில் பணி முடிந்து அறைக்குத் திரும்பிய கோகுல் கதவைத் திறந்து பாா்த்தபோது, ஹரிஹரன் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இது குறித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீஸாா், ஹரிஹரன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.