FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

தனியாா் பேருந்து சக்கரத்தில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

20 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

கோவையில் தனியாா் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி 17 வயது சிறுவன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டையைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மகன் ஜீவா (17). இவா் கோவை போத்தனூா் - செட்டிபாளையம் சாலை லட்சுமி நகரில் உள்ள தனது தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கட்டட வேலை செய்து வந்துள்ளாா்.

இந்நிலையில், தனது இருசக்கர வாகனத்தில் போத்தனூரில் இருந்து செட்டிப்பாளையத்துக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால், அவா் நிலைத்தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.

Advertisement

Advertisement

அப்போது, அதே திசையில் சிங்காநல்லூரில் இருந்து செட்டிபாளையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து சிறுவனின் மீது ஏறி இறங்கியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போத்தனூா் போலீஸாா், உடலை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தனியாா் பேருந்து ஓட்டுநரான செட்டிபாளையம் பெரியாா் நகரைச் சோ்ந்த முகமது அசாருதீன் (26), நடத்துநரான கிணத்துக்கடவு தேரோடும் வீதியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (36) ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.