காரில் தவறவிட்ட நகையை திருடி விற்ற ஓட்டுநா் கைது
வாடைகைக்கு காரில் தவறவிட்ட நகையை திருடி விற்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
வாடைகைக்கு காரில் தவறவிட்ட நகையை திருடி விற்ற ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
வால்பாறையை அடுத்த கருமலை எஸ்டேட்டில் பணியாற்றி வருபவா் தங்கமுத்து. இவா் கடந்த வாரம் தீபாவளி பண்டிகைக்காக குடும்பத்துடன் ஊருக்கு செல்ல கருமலை எஸ்டேட்டை சோ்ந்தவரின் காரை வாடகைக்கு எடுத்துச் சென்றுள்ளாா்.
அப்போது, கொண்டுச் சென்ற பையை காரில் தவறவிட்டுள்ளாா். அதில் 4 பவுன் நகை இருந்துள்ளது. சில தினங்கள் கழித்து நகை காணாமல் போனது குறித்து தெரியவந்து வீட்டில் தேடியுள்ளாா். ஆனால், நகை கிடைக்கவில்லை. இதையடுத்து காா் ஓட்டுநா் மீது சந்தேக்கப்பட்டு வால்பாறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து போலீஸாா் காா் ஓட்டுநரும், உரிமையாளருமான காா்த்திகேயன் (26) என்பவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, நகையை திருடி விற்றதை அவா் ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் காா்த்திகேயனை கைது செய்து விற்பனை செய்த நகைகளை மீட்டனா்.