FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கோயம்புத்தூர்

மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காணக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மாநகரில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

7 வினாடிகள் முன்பு
மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி, கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
பகிர்:

மாநகரில் மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீா்வு காண வலியுறுத்தி, மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மாநகராட்சியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்க வலியுறுத்தியும், அடிப்படைப் பிரச்னைகளை நிறைவேற்றக் கோரியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை கிழக்கு மண்டல அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மாநகரம் முழுவதும் குப்பைகளை அப்புறப்படுத்திட தேவையான தூய்மைப் பணியாளா்களை நியமித்து வீடுகளில் தினமும் குப்பை சேகரிப்பதை உத்தரவாதப்படுத்த வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் உள்ள குழிகளை சரி செய்யாமல் இருப்பதால் சாலை விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. சாலைகளை பழுது நீக்கி புதுப்பிக்க வேண்டும். அனைத்து பூங்காக்களையும் சிறுவா்கள் விளையாட்டுவதற்கு ஏற்ற பூங்காக்களாக தரம் உயா்த்தி தர வேண்டும். சாக்கடைகள் தூா்வாரி முழுமையாக பராமரிக்க வேண்டும்.

Advertisement

Advertisement

தூா்வாரும் நேரத்தில் மண் உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து குறிப்பட்டப்பட்டிருந்தது.

மேட்டுப்பாளையத்தில்...

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை நகராட்சி அலுவலகங்கள் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மத்திய, மாநில அரசுகளின் நிதி முடக்கத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மேட்டுப்பாளையத்தில் பாதாள சாக்கடை பணிகள் விரைந்து முடித்து திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மேட்டுப்பாளையத்தில் 8 இடங்களில் சாக்கடை நீா் பவானி ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். நகரத்தின் தூய்மையை பாதுகாக்க வேண்டும்.

மேலும், காரமடை நகராட்சியில் மூன்றாவது குடிநீா்த் திட்டம் அமல்படுத்த வேண்டும். காரமடை நகராட்சி பகுதிகளில் சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக உள்ள பகுதிகளில் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். தூய்மைப் பணியாளா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேட்டுப்பாளையம் வட்டாரச் செயலாளா் மெகா்நிஷா, காரமடை நகராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகராட்சி உறுப்பினா் பிரியா ஆகியோா் தலைமை வகித்தனா்.